நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார் அமலா பால். படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் அதிகம் கவனம் செலுத்துகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆடுஜீவிதம் மற்றும் லெவல் கிராஸ் ஆகிய படங்கள் மலையாளத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் திருமணம் விவாகரத்தில் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் அமலா பால். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை உள்ளது. சினிமா மற்றும் திருமண வாழ்க்கை என இரண்டையும் அழகாக பேலன்ஸ் செய்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை அமலா பாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 40 கோடி ஆகும். இவருக்கு கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா ஒன்று உள்ளது.
மேலும் ஜகத் தேசாயின் சொத்துக்களை அமலா பால் சொத்து மதிப்புடன் சேர்த்தால் மொத்தமாக ரூ. 50 கோடி இருக்கும் என்கின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.