பிரச்சனை என் உடையில் இல்லை, உங்க கேமராவில் தான்!! அமலா பால் கொடுத்த விளக்கம்!!
தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அமலா பால். ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர், சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதையடுத்து அமலா பால் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள லெவல் க்ராஸ் திரைப்படம், இன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வந்தது. அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் லெவல் க்ராஸ் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமலா பால், கவர்ச்சியான உடையில் வந்தார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. இது தொடர்பாக பேசிய அமலா பால், என்னுடைய உடை கவர்ச்சியாக இல்லை, என்னுடைய ஆடையை கேமராக்கள் காட்சியப்படுத்திய விதம்தான் பிரச்சினை.
எனக்கு எது வசதியான ஆடையோ அதைத்தான் அணிந்திருந்தேன். என்னுடைய ஆடையில் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை என்று அமலா பால் விளக்கம் கொடுத்துள்ளார்.