அமலா பாலின் முன்னாள் கணவரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை! தலைவி சொன்ன கரெக்ட் தான் போல!
தமிழ் சினிமாவில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்று க்ளாமருக்கே உறித்தான நடிகை என பெயர் பெற்று முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கியும் வாயை கொடுத்து மாட்டியும் வருகிறார்.
விவசாயிகளின் போராட்டம் பற்றி பேசி பலரி வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், தமிழி சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகை அமலாபாலின் முன்னாள் கணவருமான ஏ.எல். விஜய் இயக்கி வரும் தலைவி படத்தில் நடித்து வருகிறார். 2019ல் ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு கொரானா லாக்டவுனால் தள்ளிபோனது.
தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு பாகம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் கதாநாயகியான கங்கனா ரணாவத், இயக்குனர் ஏஎல் விஜய்யை மனதார பாராட்டும் பதிவு ஒன்றை ட்விட் செய்துள்ளார். அதில், ‘கூடிய விரைவில் தலைவி படத்திற்கான பயணம் முடிவடைய உள்ள நிலையில், உங்களுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. ஒரு கலைஞனாக இருக்கும்போது மட்டும் உங்களுடைய கண்கள் பிரகாசமாக இருப்பதில்லை.
Dear Vijay sir, as first half dubbing of #Thalaivi is over, only second half is left, this journey together is coming to an end, I never feel a sinking feeling that I feel as I think about it, I have identified this feeling as missing you factor I have a confession to make (cont) pic.twitter.com/lqTgGc3JSp
— Kangana Ranaut (@KanganaTeam) March 9, 2021
மாறாக ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும் போதும் உங்கள் கண்கள் பிரகாசமாக ஜொலிக்கிறது. எனவே உங்களின் கோபம், பாதுகாப்பின்மை, விரட்டி ஆகியவற்றிற்கான அறிகுறியை பார்க்கமுடிகிறது. மேலும் தலைமுறை தலைமுறையாக பணியாற்றியவர்கள் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசும் பொழுது அவர்களின் கண்கள் ஒலிக்கிறது.
First thing I noticed about you was you say no to tea,coffee,wine,non veg,parties impossible to get close to you, then slowly I realised you are never far,you are not only amazingly competent your eyes shine brighter when I excel as an artist, through so many ups and downs (cont)
— Kangana Ranaut (@KanganaTeam) March 9, 2021
இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, நீங்கள் சாதாரண மனிதர் அல்ல. எனது ஆழ்மனதில் இருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு நான் உங்களை மிஸ் செய்வேன்’ என்று கங்கனா ரனாவத் அதில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குனர் ஏஎல் விஜய்யை புகழ்ந்து தள்ளிய ட்விட்டர் பதிவை பார்த்த கோலிவுட்டே ஆடிப் போய் விட்டது.