இரண்டாம் கல்யாணம் எப்போது! விவாகரத்துக்கு பின் உண்மையை உடைத்த நடிகை அமலா பால்

Amala Paul Indian Actress
By Edward Jul 02, 2022 01:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிந்து சம்வெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். மலையாள பெண்ணாக அதுவும் குடும்ப பாங்கான பெண்ணாக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த அமலாபால் சிந்து சமவெளி படத்தின் மூலம் சர்ச்சை நடிகையாகினார்.

சினிமாவும் விவாகரத்தும்

இப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொண்டார். இப்படத்தின் வரவேற்பால் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாகினார்.

தெய்வத்திருமகள் படத்தில் நடித்த அமலாபால் அப்படத்தின் இயக்குனர் கேஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட விஜய் - அமலா பால் 3 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்துக்கு அமலாபாலின் தவறான பழக்கங்கள் தான் காரணம் என்று ஒரு பேட்டியில் விஜய்யின் தந்தை ஏஎல் அழகப்பா கூறியிருந்தார்.

சினிமா எண்ட்ரி

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தற்போது லைவ் சாட்டில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அதில் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு எடக்குமுடக்கான பதிலை அளித்துள்ளார். உங்களை திருமணம் செய்ய என்ன எலிஜிபிலிட்டி இருக்கிறது என்று கேட்டுள்ளார். இதற்கு அமலா பால், அது என்ன என்று இன்று வரை அதற்கான வழியை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். அதுபற்றி அறிந்தால் கண்டிப்பாக தெரியப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

Gallery