ஆடை இல்லாமலே நடித்து விட்டேன்.. அந்த மேட்டர்லாம் ஒரு விஷயமா? அமலா பால் சர்ச்சை கருத்து
Amala Paul
By Dhiviyarajan
மலையாள பட நடிகையாக இருந்த அமலா பால் 2010 -ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த மைனா என்ற படத்தில் சிறப்பாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். தற்போது அமலா பால் தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
ப்ரிதிவ்ராஜ் நடிப்பில் ஆடு ஜீவிதம் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் ப்ரிதிவ்ராஜ் அமலா பால் உடன் முத்த காட்சி நெருக்கமான காட்சி போன்றவற்றில் நடித்திருப்பார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இது குறித்து பேசிய அமலா பால், " படத்திற்காக நான் ஆடை இல்லாமல் கூட நடித்தேன். லிப் லாக் எல்லாம் ஒரு விஷயமா" என்று கூறியுள்ளார்.