71 வயது நடிகருடன் ரொமான்ஸ்! வாய்ப்பில்லாமல் நடிகை அமலா பால் இப்படி இறங்கிட்டாரே
நடிகை அமலா பால் விவாகரத்துக்கு பிறகு தற்போது சற்று கிளாமராகவும் நடிக்க தயங்குவதில்லை. அவர் ஆடை படத்தில் சற்று எல்லைமீறி சென்று டிரஸ் இல்லாமல் நடித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.
பிகினி போட்டோ வைரல்
மேலும் நேற்று அமலா பால் மாலத்தீவில் நீச்சல் உடையில் பல ஆங்கிள்களில் போட்டோ எடுத்து வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அவை தற்போதும் வைரலாக பரவி கொண்டிருக்கிறது.
அமலா பால் தற்போதும் கிளாமர் ரோல்களில் கூட நடிக்க தயார் என்பதை காட்ட தான் இப்படி ஒரு போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருப்பார் போல.
மூத்த நடிகருக்கு ஜோடி
தமிழில் தற்போது அமலா பாலுக்கு எந்த படமும் இல்லை. இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக கிறிஸ்டோபர் என்ற படத்தில் அமலா பால் நடித்து வருகிறார். வேறு படவாய்ப்புகள் இல்லாத நிலையில் 71 வயது நடிகரின் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அமலா பால் நடிக்கும் அளவுக்கு இறங்கிவிட்டாரே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.