எனக்கு பர்ஸ்ட் நைட் நடக்கல..அதுதான் நடந்துச்சு!! நடிகை அமலா பால் உடைத்த ரகசியம்...
அமலா பால்
சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை அமலா பாலுக்கு மைனா என்ற படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தார்.

இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால், இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த அமலா பால், ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பெற்றப்பின் கணவருடன் பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

நோ பர்ஸ்ட் நைட்
சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜகத் தேசாய் ரொம்பவே எமோஷனலானவர். நான் நடித்த மைனா படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுதார். நாங்கள் செய்த முதல் டேட்டிலேயேகூட அவர் அழுதார். அதனால் தான் நான் காதலில் விழுந்தேன்.
சொல்லப்போனால் எங்களுக்கு பர்ஸ்ட் நைட் இல்லை, பர்ஸ்ட் டே தான், பர்ஸ்ட் டே, செக்ண்ட் டே. நிச்சயதார்த்தம் அன்று எங்களுக்குள் செம சண்டை. சண்டை முடிந்து அப்போதுதான் நான் பேட்ச் அப் செய்தேன். பின் எமோஷனலாக அப்படியே நடந்தது என்று ஓபனாக அமலா பால் தெரிவித்துள்ளார்.