சரிகமப சீனியர் 5ன் 3வது இறுதி சுற்று போட்டியாளர்!! யார் தெரியுமா?
Zee Tamil
Saregamapa Seniors Season 5
By Edward
சரிகமப சீனியர் 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நடைபெற்று வருகிறது.

கடந்த 5 வாரங்களாக டிக்கெட்டு ஃபினாலேவுக்கான போட்டிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே, சிறப்பாக பாடி அசத்திய சுஷாந்திகா, சரிகமப சீனியர் சீசன் 5ன் முதல் இறுதி சுற்றுப்போட்டியாளராகவும், 2வது ஃபைனலிஸ்ட்டாக ஸ்ரீஹரி இடம்பிடித்தார்.
இதனைதொடர்ந்து 3வது இறுதி சுற்றுப்போட்டியாளருக்காக Folk ரவுண்ட் இந்த வாரம் நடைபெற்றுள்ளது. இதில் யார் சிறப்பாக பாடி அசத்தி அந்த இடத்தை பிடிப்பார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சபேசன்
இந்நிலையில், வரும் வாரத்திற்கான பிரமோ வீடியோ வெளியானதை அடுத்து சபேசன் தான் 3வது இறுதி சுற்றுப்போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.