காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. விஜய்யுடன் விவாகரத்து செய்தது ஏன்
நடிகை அமலா பால் சமீபத்தில் தான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். ஜகத் தேசாய் என்பவரை காதலித்து வந்த அமலா பால் கடந்த வாரம் தான் அவரை மணந்தார். ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தனர்.
நடிகை அமலா பால் முதன் முதலில் திருமணம் செய்தது இயக்குனர் ஏ.எல். விஜய்யை தான். படங்களில் ஒன்றாக பணிபுரியும் போது ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
ஆனால், இந்த நட்சத்திர ஜோடியின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது.
இதன்பின் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட ஆண் பிள்ளைக்கு தந்தையாகிவிட்டார். இவர்களுடைய விவாகரத்துக்கு இயக்குனர் விஜய்யின் குடும்பம் தான் காரணம் என கூறப்படுகிறது. முதலில் இருந்தே அமலா பாலை விஜய் திருமணம் செய்துகொள்வது அவருடைய குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்கின்றனர்.
அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பது தான் விஜய்யின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படியொரு சூழ்நிலையில் தான் இருவருக்கும் செட் ஆகாமல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக சில தகவல்கள் கூறப்படுகிறது.