பிகிலா? அமேசானிடம் வாய்க்கொடுத்து மொக்கை வாங்கி விஜய் ரசிகர்
கொரோனா லாக்டவுனால் சினிமாத்துறையில் வருமானம் இல்லாமல் இருந்த நேரத்தில் தியேட்டர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டனர் தயாரிப்பாளர்கள். அவர்களுக்கு ஒரு பக்கபலமாக இருந்து வருவது ஓடிடி தளங்கள்.
தற்போது தனக்கான ஒரு பெரிய மார்க்கெட்டை வளர்த்து வருபவர்கள் அமேசான் பிரைம் நிறுவனம். சமீபத்தில் பல படங்களை தன்னுடைய தளத்தில் வாங்கி வெளியிட்டு வருகிறது. அதில் சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் பெரியளவில் பேசப்பட காரணமாக அமைந்தது.
இந்நிலையில் அமேசான் டிவிட்டர் பக்கத்தில் தற்போது வரை நடித்ததில் எந்த ரோலிலும் நடித்து சிறந்த நடிகராக இருந்தவர் யார் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் ரசிகர் ஒருவர் ராயப்பன் பிகில் தளபதி விஜய் என்று பதிவிட்டார்.
இதற்கு அமேசான் தளம் பிகிலா? என்று கேட்டுள்ளது. ஆனால் சிலர் இதை காமெடியாக எடுத்துக்கொண்டு அமேசான் பிகில் விஜய்யை கலாய்த்துள்ளது என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.