அம்பானி முதல் அதானி வரை!! கும்பமேளாவில் பெட்டிக்கடை வைத்தார்களா? வைரல் வீடியோ..
மகா கும்பமேளா
உத்திரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நிகழ்வுகள் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. மகா சிவராத்திரி வரும் நிலையில் பல கோடிக்கணக்கான மக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் அங்கு நீராடி வருகிறார்கள். சமீபத்தில் கூட உலகின் பணக்காரரான முகேஷ் அம்பானி குடும்பத்தினர் கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடினர்.
இந்த நிகழ்வு உலகளவில் பார்க்கப்பட்டு வரும் நிலையில் சில அசம்பாவிதமாக சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் கும்பமேளாவில் கலந்து கொள்ளாத பிரபலங்கள் பங்கேற்றது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்பானி, அதானி, எலான் மஸ்க், சுந்தர் பிச்சை
இந்நிலையில், உலகில் பெரும் பணக்காரர்களாக அம்பானி, அதானி, எலான் மஸ்க், சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்கள் மகா கும்பமேளாவில் அவரவர்களின் தயாரிப்புகளை பெட்டிக்கடை வைத்து விற்பனை செய்வது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
AI தொழில்நுட்பத்துடன் இந்த வீடியோ உருவாகி 1.6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.
AI is Getting Out Of Control 😂😂 Famous Personalities Ambani, Adani, Elon Musk.. at Kumbh Mela at their Shops 😂 pic.twitter.com/AKTzx25MGA
— Rosy (@rose_k01) February 20, 2025