ரூ. 24 லட்சம் சம்பளம்!! அம்பானி வீட்டு சமையல்காரருக்கு ஏன் இவ்வளவு சம்பளம் தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Mumbai Anant Ambani Nita Ambani Isha Ambani
By Jai Apr 26, 2026 07:15 AM GMT
Report

முகேஷ் அம்பானி அண்டிலியா

உலகின் பணக்காரர் பட்டியலில் 21வது இடத்தில் இருப்பவர் தான் முகேஷ் அம்பானி. மும்பையின் தென்பகுதியில் அவரது வீடான அண்டிலியா இருக்கிறது. அதுவும் 27 மாடிகள் கொண்ட அண்டிலியா கட்டிடம் சுமார் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்புடையது. குறிப்பாக இக்கட்டிடத்தை பராமரிக்கவும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முகேஷ் அம்பானி ஒவ்வொரு ஆண்டுக்கும் பல கோடி செலவு செய்து வருகிறார்கள்.

ரூ. 24 லட்சம் சம்பளம்!! அம்பானி வீட்டு சமையல்காரருக்கு ஏன் இவ்வளவு சம்பளம் தெரியுமா? | Ambani S Roti Chef Makes Rs 24 Lakh A Year Salary

அதன்பின் இந்த வீட்டுக்கு ஒவ்வொரு மாதமும் 70 லட்சம் மின் கட்டணமாக செலுத்தப்படுகிறது. இக்கட்டிடத்தில் சமையல்காரர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என மொத்தமாக 600 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் அதிகமானோர், அங்கேயே தங்கிக்கொள்ள இடவசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அம்பானி குடும்பத்தினர் மிகவும் எளிய உணவையே விரும்பினாலும், அங்கு பணியாற்றுபவர்களுக்கும் மிகவும் சத்தான உணவு வழங்கப்படுகிறது.

ரூ. 24 லட்சம் சம்பளம்!! அம்பானி வீட்டு சமையல்காரருக்கு ஏன் இவ்வளவு சம்பளம் தெரியுமா? | Ambani S Roti Chef Makes Rs 24 Lakh A Year Salary

அம்பானி குடும்பத்தினர் கேழ்வரகில் தயாரிக்கப்படும் உணவு, சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பிரெட், குஜராத்தி முறை உணவு, சலாட்களையே அதிகமாக விரும்புவார்களாம். அதேபோல் இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு தினமும் 4000 சப்பாத்தி தயாரிக்கப்படுகிறதாம். இந்த சப்பாத்திகளை தயாரிக்க தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் சமையல் அறையில் வைக்கப்பட்டுள்ளதாம். இந்த இயந்திரத்தை சமையல் கலை நிபுணர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

ரூ. 24 லட்சம் சம்பளம்!! அம்பானி வீட்டு சமையல்காரருக்கு ஏன் இவ்வளவு சம்பளம் தெரியுமா? | Ambani S Roti Chef Makes Rs 24 Lakh A Year Salary

சம்பளம்

பணியாற்றும் தலைமை சமையல்காரர் ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாகி அதிகாரி போல் செயல்படுவார். இங்கு ரொட்டி தயாரிக்கும் ஒரு சமையல்காரருக்கும் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 2 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

ரூ. 24 லட்சம் சம்பளம்!! அம்பானி வீட்டு சமையல்காரருக்கு ஏன் இவ்வளவு சம்பளம் தெரியுமா? | Ambani S Roti Chef Makes Rs 24 Lakh A Year Salary

இந்த சம்பளம் வெறும் சமையல் திறனுக்கு மட்டுமில்லாமல், அதிகளவிலான உற்பத்தியை துல்லியமாக நிர்வகிக்கும் திறனையும் பிரதிப்பலிப்பதற்காகவும் தான். குறிப்பாக அம்பானி வீட்டு சமையல்காரரின் சம்பளத் தொகுப்பு, பல பட்டதாரி தொழில்முனைவோரின் வருமானத்தைவிட அதிகமாக இருப்பதால் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.