அம்பானி முதல் பிர்லா வரை!! வாரிசு கைக்கு வந்த சாம்ராஜ்ஜியங்கள்..

Godrej Reliance Mukesh Dhirubhai Ambani Gautam Adani Aditya Birla Group
By Edward Jun 01, 2025 11:30 AM GMT
Report

அம்பானி முதல் பிர்லா வரை

நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் தன்னுடைய சொத்துக்களை இருக்கும் வரை உயரத்தில் கொண்டுச்சென்று பின் தன் வாரிசுகளிடம் ஒப்படைப்பார்கள். அப்படி பல வணிக குடும்பங்கள் ஏற்கனவேஎ வணிக பொறுப்புகளை தங்கள் இளம் தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு பணி பாரத்தை குறைத்துக்கொள்வார்கள். அந்தவகையில் அம்பானி முதல் பிர்லா வரை வாரிசு கைக்கு வந்த சாம்ராஜ்ஜியங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்...

அம்பானி முதல் பிர்லா வரை!! வாரிசு கைக்கு வந்த சாம்ராஜ்ஜியங்கள்.. | Ambani To Adani Next Gen Heirs Appointed

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2023ல் தனது குழந்தைகளையும் தனது நிறுவன குழுமத்தின் வாரியத்தில் அதிகார்ப்பூர்வமாக சேர்த்தார். 33 வயது இரட்டையர்களான இஷா மற்றும் ஆகாஷ், 30 வயதான ஆனந்த் ஆகியோருக்கு பொறுப்புகளை பிரித்துக்கொடுத்தார். டாடா குழுமத்தின் தலைவர் நோயல் டாடா தனது 3 குழ்ந்தைகளான நெவில், லியா, மாயா ஆகியோருக்கு பொறுப்புகளை பிரித்துக்கொடுத்தார்.

கோத்ரேஜ் குழுமம்

கோத்ரேஜ் குழுமத்தின் உரிமை கடந்த மே மாதம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குழுமம் மற்றும் கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் என இரண்டாக பிரிக்கபப்ட்டது. ஜாம்ஷித் கோத்ரேஜின் மகள் நிரிகா ஹோல்கர் கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தில் 14 நிறுவனங்களுக்கும் சட்ட மற்றும் நிறுவன ஆலோசன செயல்பாடுகளை வழிநடித்து வருகிறார். ஆதி கோத்ரேஜின் மகன் பைரோஜ்ஷா கோத்ரேஜ், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாக துணை தலைவராக இருந்து வருகிறார். 2026ல் ஆகஸ்டில் நாதிர் கோத்ரேஜ் தலைவராக வருவார்.

அம்பானி முதல் பிர்லா வரை!! வாரிசு கைக்கு வந்த சாம்ராஜ்ஜியங்கள்.. | Ambani To Adani Next Gen Heirs Appointed

பஜாஜ் குழுமம் 

பஜாஜ் குழுமம் தலைவர் பதவியை நீக்கிவிட்டு, ராகுல் பஜாஜின் மகன்கள் ராஜீவ் மற்றும் சஞ்சீவ், அவரது உறவினர்கள் சேகர் மற்றும் நிராஜ் மற்றும் அவரது மகன் நிரவ் ஆகியோர் அடங்கிய குடும்ப கவுன்சில் மூலம் செயல்பட்டு வருகிறது. பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் பஜாஜின் மகன் ரிஷப்நயன் பஜாஜ் இருந்து வருகிறார். நீரவ் நிரஜ் பஜாஜின் மகன் நிரவ் பஜாஜ், பஜாஜ் குழும நிறுவனமான முகந்தில் கார்ப்பரேட் உத்தி தலைவராக இருக்கிறார்.

அதானி குழுமம்

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் அடுத்த சந்ததியினரிடம் வணிக கட்டுப்பாட்டை கொடுத்துவிடுவார். கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் மகன் பிரணவ் அதானி தற்போது தகவல் தொடர்பு மற்றும் அனைத்து நுகர்வோர் சார்ந்த வணிகங்களை பார்த்து வருகிறார். கவுதம் அதானியின் மகன் கரண் அதானி, அதானி போர்ட்ஸ் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். கவுதம் அதானியின் இளைய மகன், அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். கவுதம் அதானியின் தம்பி ராஜேஷ் அதானியின் மகன் சாகர் அதானி, அதானி நிறுவன கட்டமைப்பு மற்றும் நிறுவனத்தின் அனைத்து மூலோபாய மற்றும் நிதி விஷயங்களையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.

ஆதித்யா பிர்லா குழுமம்

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் மூத்த மகள் அனன்யா பிர்லா, 17 வயதில் ஸ்வதந்த்ரா மைக்ரோஃபின்னை நிறுவி, ரூ. 16000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பாக கொண்டு வந்துள்ளார். குமார் மங்கலம் பிர்லாவின் இரண்டாவது வாரிசு ஆர்யமான் விக்ரம், வணிகத்தில் நுழைவதற்குமுன் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக இருந்து பல்வேறு வணிகங்கலில் நெருக்கமாக உள்ளார். விசி நிதியான ஆதித்யா பிர்லா வென்ச்சர்ஸையும் நடத்தி வருகிறார். இரண்டு பேரும் ஆதித்யா குழுமத்தின் முதன்மை நிறுவனங்களான கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆதித்யா பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெயில் வாரியர்களில் இணைந்தனர்.