என் தங்கச்சி நடுவராக இருந்த நிகழ்ச்சி!! எனக்கு நடந்த அசிங்கம்!! வருத்தப்பட்ட நடிகை அம்பிகா..
அம்பிகா - ராதா
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளாக திகழ்ந்த சகோதரிகள் தான் அம்பிகா - ராதா. பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகிகளாக திகழ்ந்து வந்தனர். சமீபத்தில் நடிகை அம்பிகா அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், நாங்கள் நடித்த காட்சிகளை இன்றைய தலைமுறை மீண்டும் உருவாக்குவது எனக்கு ரொம்ப சந்தோஷம் தரும். நான் கலையை ரசிப்பவன், அந்த ஆர்வத்தோடு செய்பவர்களை பார்க்கும்போது கலைமகளின் பிள்ளைகளை பார்ப்பதுபோல் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
எனக்கு நடந்த அசிங்கம்
மேலும், கடற்கரையில் ஒரு அழகான காட்சியை வைத்து ஒருவர் கொடுத்திருக்கும் ரியாக்ஷன் வீடியோ வருத்தமடைய செய்துள்ளதாம். அதை பார்க்கும்போது ரொம்ப வருத்தமாக இருந்தது. நல்ல காட்சியை இப்படிப்போட்டு அசிங்கப்படுத்துறாங்களே என்று தோன்றியது.

சமீபத்தில் தன்னுடைய தங்கச்சி நடுவராக இருந்த ஒரு டிவி நிகழ்ச்சியில், தன்னைப்பற்றி மிகவும் அவமானமாக காமெடி செய்தனர். என்னை வைத்து காமெடி என்ற பெயரில் ரொம்ப மோசமாக பேசினாங்க. அதை காமெடி என்று நினைத்திருக்கலாம், ஆனால் அது ரசிக்கும்படி இல்லை. கோபப்படுத்துவது போல் தான் இருந்தது என்று அம்பிகா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.