2 வருடத்தில் முறிந்த திருமண வாழ்க்கை..விவாகரத்துக்கு காரணம் இதுதான்!! நடிகை அம்பிகா..

Ambika Gossip Today Divorce Tamil Actress
By Edward Apr 09, 2026 02:00 PM GMT
Report

நடிகை அம்பிகா

80களில் கோலிவுட்டில் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை அம்பிகா, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து அதன்பின் மார்க்கெட் குறைய கேரக்டர் ரோலுக்கு மாறினார். பூவெல்லாம் கேட்டுப்பார் படம் ஆரம்பித்து அவன் இவன் படம் உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார் அம்பிகா. இந்நிலையில் தன்னுடைய பர்சனல் பக்கங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

2 வருடத்தில் முறிந்த திருமண வாழ்க்கை..விவாகரத்துக்கு காரணம் இதுதான்!! நடிகை அம்பிகா.. | Ambika Slams Youtubers Opens Up On Divorce

அதில், யூடியூப்பில் 5 பேர் இருக்கிறார்கள். அவர்கள் ரொம்ப தவறானவர்கள், ரொம்ப தவறானவர்கள் என்றால் அவர்களுக்கு மனித பக்கமே இல்லை, ரொம்பவே வல்காரிட்டியோடு பேசுகிறார்கள்.

அவர்கள் பெயரை சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பரவாயில்லை நேரில் பார்க்கும்போது சொல்லிக்கொள்கிறேன். ஒருவருக்கு 20 வயது இருக்கும். அவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அவர்கள் என்னை நல்லவள் என்று சொல்வதால் நான் நல்லவள் ஆகிவிடமாட்டேன், கெட்டவள் என்று சொல்வதால் கெட்டவளாகிவிடமாட்டேன். வீட்டில் பிரச்சனை இருப்பவர்கள் கெட்டதை பேசுவார்கள், அதேபோல் எனக்கு இயக்க வேண்டும் என்று ஆசையிருந்தது. இப்போது இல்லை.

2 வருடத்தில் முறிந்த திருமண வாழ்க்கை..விவாகரத்துக்கு காரணம் இதுதான்!! நடிகை அம்பிகா.. | Ambika Slams Youtubers Opens Up On Divorce

விவாகரத்துக்கு காரணம்

அதேசமயம் லேட்டஸ்ட் யூடியூப் சேனல் ஆரம்பித்தப்பின் குறும்படங்கள் இயக்க ஆசை, என் மண வாழ்க்கை முறிவுக்கு சினிமா காரணமில்லை. எந்த துறையில் இருந்தாலும் இரண்டு பேருக்குள்ளும் செட்டாகவில்லை என்றால் அது முடிந்துவிடும். எவ்வளம் சம்பளம் வாங்கினாலும் பிரிய வேண்டும் என்றால் பிரிந்துதான் ஆகவேண்டும்.

அரசியலில் இருக்கும் இரண்டு பேர் பிரிந்தால் அரசியல் காரணமில்லை, அதேபோல் சினிமா காரணமில்லை. நானும் அந்த நபரும் மட்டும்தான் காரணம். நான் இந்தத்துறையில் ஒரு அளவுக்கு புத்திசாலித்தானத்தோடு நடந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.