அம்மா முன்பே ஸ்ரேயாவை ரூமில் தேம்பிதேம்பி அழ வைத்த இயக்குனர் அமீர்!! பதிலடி கொடுத்த பாடகி..

Gossip Today Shreya Ghoshal Tamil Singers Ameer Sultan
By Edward Jul 18, 2023 03:31 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் அமீர், மெளனம் பேசியதே, பருத்திவீரன், ராம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானார். தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அமீர், படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சம் கராரான ஆளாக இருப்பார். தனக்கு வேலை ஆகவில்லை என்றால் யாரென்று கூட பார்க்காமல் கடுமையாக திட்டிவிடுவாராம்.

அம்மா முன்பே ஸ்ரேயாவை ரூமில் தேம்பிதேம்பி அழ வைத்த இயக்குனர் அமீர்!! பதிலடி கொடுத்த பாடகி.. | Ameer Open Singer Shreya Ghoshal Cry In The Room

அப்படி ஒரு பிரபல பாடகி அமீரிடம் கடுமையாக திட்டுவாங்கி தேம்பித்தேம்பி அழுதிருக்கிறார். கார்த்தி, பிரியாமணி நடித்து சூப்பர் ஹிட் பெற்ற பருத்திவீரன் படத்தில் ஐயைய்யோ.. என் உசுருக்குள்ள என்ற பாடலை பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பாடி இருப்பார்.

அப்பாடலுக்காக கமிட்டாகிய ஸ்ரேயாவுக்காக 2 வாரங்கள் அமீர் காத்திருந்துள்ளார். மும்பையில் இருந்து வந்தவர் மற்ற இசையமைப்பாளர்களின் பாடலை பாடிக்கொடுத்துவிட்டு தான் அமீரின் படத்தின் ரெக்கார்டிங் செய்ய வந்திருக்கிறார்.

பல பாடல்களை பாடியதால் சோர்வாக இருக்கிறேன் என்று அமீரிடம் ஸ்ரேயா கோஷல் கூறியிருக்கிறார். அதெல்லாம் என் பிரச்சனை கிடையாது இன்றே பாடி கொடுத்தாக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதற்காக 2 வாரங்கள் அமீர் கத்திருந்ததால் சக்குப்போக்கு சொன்னதால் டென்ஷனாகியிருக்கிறார். அதன்பின் ஒருவழியாக பாடி கொடுத்த போது அமீருக்கு திருப்தி இல்லையாம்.

அம்மா முன்பே ஸ்ரேயாவை ரூமில் தேம்பிதேம்பி அழ வைத்த இயக்குனர் அமீர்!! பதிலடி கொடுத்த பாடகி.. | Ameer Open Singer Shreya Ghoshal Cry In The Room

அந்த பாடலை 9 ஆம் வகுப்பை 2 வருடங்களாக படிக்கும் முத்தழகு தான் பாடுகிறார் ஸ்ரேயா கோஷல் கிடையாது என்று கடுமையாக திட்ட, ரூமில் தேம்பித்தேம்பி அழுத்துள்ளார். இதனை பார்த்த அவரது அம்மா மேனேஜரிடம் எதற்காக இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கல் என்று கேட்டிருக்கிறார்.

உடனே அமீர், எனக்கு வேண்டியது கிடைத்தே ஆகவேண்டும், எதற்கும் பொருத்துப்போக முடியாது. ஸ்ரேயா கோஷலுக்கு வேண்டுமானால், சம்பளத்தை வாங்கிக்கொண்டு அவரை போக சொல்லுங்கள் நான் வேறொருவரை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

உடனே தலைக்கேரிய ஈகோவால் தன் திறமையை காட்டி அப்பாடலை பாடி முடித்துக்கொடுத்திருக்கிறார். பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியும் இருந்தது.