ஒரே வீட்டில் தனித்தனி பெட்ரூமில் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை!! அமீர் - பாவ்னி ரெட்டி கொடுத்த ஷாக்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபலமானவர் நடிகை பாவ்னி ரெட்டி. ஏற்கனவே திருமணம் செய்து கணவர் மரணமடைந்த நிலையில் அதில் இருந்து மீண்டு வந்த பாவ்னி பிக்பாஸ் பிரபலம் அமீருடன் காதலில் இருந்து வருகிறார்.
தற்போது இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தி இணையத்தில் கசிய, ஆரம்பித்தில் பாவ்னி கர்ப்பம் என்றும் கல்யாணமாகிவிட்டது என்று செய்திகள் வந்தது.
அதேபோல் தான் இதுவும், நாங்கள் பிரியமாட்டோம் என்று அமீர் தெரிவித்திருந்தார். தற்போது நாங்கள் ஒரே வீட்டில் வசித்து வருகிறோமே தவிர தனித்தனி பெட்ரூமில் தான் இருக்கிறோம் என்றும் தெரிவித்திருகிறார்கள்.
தற்போது சினிமாவில் சாதித்த்துவிட்டு அதன்பின் நாங்கள் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையை வாழப்போகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட நெட்டிசன்கள் ஒரே வீட்டில் தனித்தனி பெட்ரூமை வைத்து கலாய்த்து வருகிறார்கள்.