அஜித் படத்துல தெரியாம நடிச்சிட்டேன்!! பிக்பாஸ் அமீரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர்களில் ஒருவர் அமீர். நடன இயக்குனராக பிரபல தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சிகளில் பணியாற்றி பிக்பாஸ் 5 சீசனில் வைல்ட் கார்ட் மூலம் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் நடிகை பாவனியுடன் காதலில் இருந்து வந்த அமீர் நிகழ்ச்சிக்கு பின்பும் அவர் மீது காதலில் இருந்து வந்தார். பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக நடித்தப்பின் அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொண்டு விரைவில் திருமணமும் செய்யவுள்ளனர்.

பிக்பாஸ்க்கு பிறகு அமீர் - பாவனி நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் முக்கிய ரோலில் நடித்தனர். அதன்பின் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தனர். தற்போது அமீர் ஒரு படத்தினை இயக்கி ஆசைப்பட்டு இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.
இயக்கி, நடிக்கவுள்ள இப்படத்தில் பாவனி, மன்சூர் அலி கான் நடிக்கவுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமீர், எனக்கு இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் ஆகவேண்டி தான் ஆசைப்பட்டேன்.
துணிவு படத்தில் தெரியாம நடிச்சிட்டேன் என்று அது ஒரு விபத்து என்றும் கூறியிருக்கிறார். அமீர் இப்படி கூறியதை நெட்டிசன்கள் பலர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிக்க ஆசை என்று கூறிவிட்டு தற்போது அப்படியே மாற்றிவிட்டீர்கள் என்று கூறி கலாய்த்து வருகிறார்கள்.
#Thunivu படத்துல Accident ஆ நடிசிட்டேன் பிக் பாஸ் #Amir pic.twitter.com/i0DbkQzOX3
— chettyrajubhai (@chettyrajubhai) April 11, 2023