அம்மாவின் கனவை நிறைவேற்றிய பிக்பாஸ் அமீர்! டிரெண்டிங் வீடியோ

biggboss television viralvideo prabhudeva biggbosstamil5 amir kingsofdance
By Edward Dec 23, 2021 05:43 AM GMT
Report

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது மக்கள் மனதை ஈர்த்து வருபவர் அமீர். வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸ் வீட்டில் சென்ற அமீர், பாவ்னி மீது காதல் என்று கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் அவர் குடும்பத்தை பற்றி பேசியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்பாவை பார்த்ததில்லை, அம்மாவை கொலை செய்தவன் கண்முன் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறியது போட்டியாளர்களை அழ வைத்துள்ளது. தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அமீர் நடனத்தை கையில் எடுத்தேன் என்றும் கூறியிருந்தார். அதேபோல் அப்படி செய்தும் காட்டியுள்ளார் அமீர்.

அமீர் பற்றி சில விஷயங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது நடன நிகழ்ச்சி ஒன்றில் நடன இயக்குனர் பிரபு தேவாவை பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

கிங்ஸ் ஆப் டான்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பிரபுதேவா சிறப்பாக நடனமாடிய மூன்று சிறுமிகளை பார்த்து பாராட்டு தெரிவித்தார்.

அந்த மூன்று சிறுமிகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்ததே அமீர் தான். பிரபுதேவா காலில் விழுந்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ள வீடியோ தான் இது.