ஒரே ரொமான்ஸ் தான்! பிக்பாஸ் நடிகையுடன் திருமணத்திற்கு ரெடியான அமீர்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 5 சீசனை ராஜு டைட்டில் வின்னராகவும் பிரியங்கா ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட பாலாஜி முருகதாஸ் டைட்டிலை கைப்பற்றினார். இரு நிகழ்ச்சிகளிலும் பிரபலமாகிய பலர் சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 5வது சீசனில் பெரியளவில் காதல் விமர்சனத்தில் சிக்கியவர்கள் பாவ்னி, அமீர் ஜோடிதான்.
நிகழ்ச்சியில் பல இடங்களில் நெருக்கமாக இருந்து சர்ச்சையிலும் சிக்கினார்கள். நிகழ்ச்சிக்கு பின் கூட இருவரும் எடுத்த புகைப்படங்கள் ஓ அப்படியாக இருக்குமோ என்றும் கூறப்பட்டது. தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்கள்.
சமீபத்தில் இருவரும் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை பார்த்து விரைவில் திருமணம் என்ற செய்தியும் பரவியது. இதற்கு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில், ராஜு எப்போது கல்யாணம் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அமீர் சீக்கிரமே என்று கூற், பாவ்னி அதெல்லாம் கிடையாது என்று கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பாவ்னி காதல் எல்லாம் கிடையாது என்று கூறி வருகிறார்.
இணையத்தில் அவருடன் கேட்கப்பட்ட கேள்விகளில் கூட பாவ்னி அமீர் நல்ல நண்பர் என்றும் அவருடன் நடனமாடுவது கஷ்டமான ஒன்று என்றும் கூறியிருந்தார். கடந்த எபிசோட்டில் அமீர் பாவ்னியின் சேலையை கடிப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

