சொத்தை பிரிக்கும் அமிதாப் பச்சன்.. உரிமையாளர் ஐஸ்வர்யாவா? கில்லாடி தான்
அமிதாப் பச்சன்
பாலிவுட் சினிமாவின் ஜாம்பவான் நடிகர் அமிதாப் பச்சன் தனது திரை வாழ்க்கையை 1969ல் துவங்கினார். இன்று வரை தொடர்ந்து 55 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு அபிஷேக் பச்சன் என்ற ஒரு மகனும் சுவேதா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இதில், அபிஷேக் பச்சன் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், அமிதாப் பச்சன் அவரது சொத்துக்களை மகன் மற்றும் மகள் இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுப்பதாக முன்பு பேட்டி ஒன்றில் சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உரிமையாளர் ஐஸ்வர்யாவா?
அதில், " எனக்கு பின் எனது சொத்துக்கள் மகன் மற்றும் மகளுக்கு சமமாக பிரித்துக் கொடுக்கப்படும். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நானும் எனது மனைவி ஜெயாபச்சனும் சேர்ந்து இந்த முடிவை பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துவிட்டோம்.
பெண் பிள்ளை திருமணம் செய்து கொண்டு வேறு வீட்டுக்கு சென்று விட்டார் என்று அனைவரும் பேசுகிறார்கள். ஆனால், என் மகனுக்கு இருக்கும் அதே உரிமை எனது மகளுக்கும் உண்டு" என்று கூறியுள்ளார்.
அமிதாப் பச்சனுக்கு சொந்தமாக ரூ. 3300 கோடி மேல் சொத்துக்கள் உள்ளதாம். இந்த சொத்துகளை பிரிக்கும் நிலையில், இதில் பாதி சொத்துக்கு அபிஷேக் பச்சன் மனைவியான ஐஸ்வர்யாராயும் உரிமையாளராக மாறப்போகிறார் என்று கூறப்படுகிறது.