பல கோடி கொடுத்து, இரவு 3 மணிக்கு நிலம் வாங்கிய அமிதாப் பச்சன்..
83 வயதிலும் திரைப்படங்கள், விளம்பரங்கள் என பிஸியாக நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். இவர் சில வருடங்களுக்கு முன் அயோத்தியில் ஒரு நிலம் வாங்கி இருந்தார்.
ரூ. 15 கோடிக்கு 15000 15,000 சதுர அடி பிளாட் ஒன்றை அவர் வாங்கி இருந்தார். அதை தொடர்ந்து சமீபத்தில் ரூ. 35 கோடிக்கு 2.67 ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார்.

அமிதாப் பச்சன் இரவு 3 மணிக்கு போன் செய்து அயோத்தியில் இருக்கும் பிளாட்டை வாங்க வேண்டும் என கூறினார் என ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் அபிநந்தன் என்பவர் பேட்டி கொடுத்துள்ளார். இரவு 3 மணிக்கு விலை பேசி முடித்து, உடனே மறுநாள் ரூ. 15 கோடி அனுப்பி இருக்கிறார்.
அந்த நேரத்தில் இரண்டு மிஸ்டு கால் இருந்ததால் உடனே போன் செய்து பேசினேன். அவர் நிலத்தை பற்றி கூறி பணம் அனுப்பினார் என அவர் கூறியுள்ளார். இரவு 3 மணிக்கு அமிதாப் பச்சன் நிலம் வாங்கிய தகவல் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.
