பல ஆயிரம் கோடி சொத்து வைத்திருக்கும் அமிதாப் பச்சன்!! 3 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை பார்த்த மகள்..
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து புகழ் பெற்றவர் அமிதாப் பச்சன். அவருக்கு அடுத்த படியாக அவரது மகன் அபிஷேப் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உட்பல பல கோடி சம்பளத்தை வாங்கி சம்பாதித்து வருகிறார்கள்.
தற்போது வரை அமிதாப் பச்சனின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய். 3390 கோடியாக இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் அமிதாப்பின் மகள் ஸ்வேதா பச்சன், நிகில் நந்தா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு வயதுக்கு வந்த வயதில் நவ்யா நவேலி என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் தன் அப்பாவை எதிர்ப்பார்க்காமல் இருந்துள்ளார் ஸ்வேதா பச்சன்.
திருமணத்திற்கு பின் ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் டீச்சராக வேலையை செய்திருக்கிறார். அதற்காக 3 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைத்தது என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
மேலும் சொந்தமாக ஒரு பேஷன் லேபிள் நடத்தி வருவதாகவும் சின்ன வயதில் எனக்கு பணம் பற்றிய விசயம் அதிகம் தெரியாது என்பதால் அனைத்து கணக்கு வழக்கும் எல்லாமே என் மகல் நவ்யா தான் பார்த்து வருகிறாள் என்று கூறியிருக்கிறார் ஸ்வேதா பச்சன்.