4-ஆம் காதலருடன் இப்படியொரு நெருக்கம்! லீக்கான நடிகை எமி ஜாக்சன் புகைப்படம்..

Amy Jackson Indian Actress
By Edward Jun 08, 2022 02:15 PM GMT
Report

லண்டன் மாடல் நடிகையாக தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பு மக்களை கவர்ந்ததால் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்திலும், தனுஷின் தங்க மகன் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இந்தியில் ஃபிரீக்கி அலி, துடக் துடக் துகியா படத்திலும் நடித்திருந்தார். 6 வருடங்களுக்கு முன் இந்தி படத்தில் நடித்திருந்த போது நடிகர் பிரதீக் பப்பருடன் ரகசிய காதலில் இருந்து பின் பிரிந்தார்.

அதன்பின் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க் உடன் காதலில் இருந்து அதையும் முறித்துக்கொண்டார். அதன்பின் லண்டன் ஓட்டல் அதிபர் ஜார்ஜ் என்பவரோடு லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்த போது கர்ப்பமாகினார்.

திருமணமாகாமலே ஆண்ட்ரு என்கிற ஆண் குழந்தையை பெற்றெடுத்து வாழ்ந்து வந்தார். குழந்தை பிறந்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த எமி ஜாக்சன் கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார்.

படங்களில் இருந்து விலகி ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்த எமி சில காலமாக பிரபல நடிகருடன் ரகசியமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றிய புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்கள் உறவுபற்றி புகைப்படத்தோடு இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

இரவு பார்ட்டியின் போது இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளனர். இருவரும் இதன்மூலம் காதலில் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.

GalleryGallery