குடும்பத்தினரால் தூக்கி எறியப்பட்டு மீண்ட பிரபல நடிகர்! அதுவும் நடிகர் நாகேஷின் மகனா இப்படி?

nagesh mounaraagam anandbabu
By Edward Jun 25, 2021 03:45 PM GMT
Report
173 Shares

தமிழ் சினிமாவில் 80, 90களில் பிரபல நடிகராகவும் டான்ஸ்சராகவும் புகழ் பெற்று இருந்த நடிகர் ஆனந்த் பாபு . இவரின் குடும்பமே கலைக்குடும்பம் என பெயர் எடுத்து நடிகர் நாகேஷின் மகனாக சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில் முதன் முதலில் தங்கைக்கோர் கீதம் படத்தில் அறிமுகமானார். அப்படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வந்த நிலையில் சேரன் பாண்டியன் படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்லதோர் பெயரை சம்பாரித்து கொடுத்து. 1

986-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் உள்ளது. இதையடுத்து 1999ல் இருந்து சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இதற்கு முழு காரணமாக இருந்தது மதுப்பழக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றதுதான்.

இதன்காரணமாகவே கடந்த 2013-ம் ஆண்டு இவரின் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தொடர்ந்து மதுவுக்கு அடிமையானதால் இவர் பிள்ளைகளும் இவரை கவனித்து கொள்ளாமல் இவரை பிரிந்தனர்.

பின் சமீபத்தில் உயிருக்கு போரடடிய போது அவரின் பிள்ளைகள் நால்வரும் மருத்துவமனையில் சேர்த்து அவரை அரவணைத்தனர். தற்போது படங்களில் சிறுகதாபாத்திரங்களிலும், சின்னத்திரை சீரியலில் மெளனராகம் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.