லட்சுமி பிரியாவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஆனந்தி..காரணம் இதுதான்..
Vijay Sethupathi
Bigg Boss
Vijay Television
Bigg Boss 10 Tamil
By Jai
பிக்பாஸ் சீசன் 10
நடிகர் விஜய் சேதுபதியால் தொடங்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 10. பல போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 10ல், இதுவரை, பிளாக் பாண்டி, சாவின்யா, கவாத், மணிவண்ணன், லட்சுமி பிரியா உள்ளிட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதனையடுத்து இன்றைய விஜய் சேதுபதி எபிசோட்டில் நாமினேட்டானவர்களில் ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நாள் தொடங்கிய காலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுத்த ஆனந்தி வெளியேறியிருக்கிறாராம்.

ஆனந்தியின் தந்தை திடீரென மரணமடைந்ததால் பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இன்றைய பிரமோ வீடியோவில் கூட ஆனந்தி இல்லை என்பதை வைத்து இந்த தகவல் உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.