அம்பானி மகனின் Z-பிரிவு பாதுகாப்பு!! 5வது நாளாக நடைப்பயணத்தில் ஆனந்த் அம்பானி..
ஆனந்த் அம்பானி
இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, எதை செய்தாலும் பிரம்மாண்டமாகத்தான் செய்வார். கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ர்சண்ட் திருமணத்தை பல ஆயிரக்கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்தார்.
இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி பல விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்தவகையில் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதியோடு தன்னுடைய 30வது பிறந்தநாளை ஆனந்த் அம்பானி கொண்டாடவுள்ளார்.
துவாரகா
அதற்காக குஜராத்தின் துவாரகாவிலுள்ள கோவிலுக்கு நடந்தே சென்று சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக தினமும் இரவு சுமார் 10 கிமீ வீதம் குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து புறப்பட்டு துவாரகாவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது வரை சுமார் 60 கிமீ தூரத்தை நடந்துவிட்டார்.
6-ஆம் நாளாக இன்று ஏப்ரல் 2ஆம் தேதியும் அதனை தொடர்ந்துள்ளார். இதனிடையே ஆனந்த் அம்பானி நடந்து செல்லும் வழியிலுள்ள முக்கிய கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்.
சாலையில் நடந்து செல்லும் போது அவருக்கு அச்சுறுத்தல் ஏதும் ஏற்படாமலிருக்க அவருக்கு பாதுகாப்பு பணியில் Z-பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக உள்ளூர் காவல் துறையினரும் அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.
பாதயாத்திரை சென்று வரும்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ஆனந்த் அம்பானி, 2, 4 நாட்களில் யாத்திரை நிறைவடையும், துவாரகாதீசர் மீது இளைஞர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும், கடவுள் இருந்தால் போதும், நாம் எதற்குமே கவலை கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.