பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா பிக் பாஸ் ஷிவானி.. பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

Shivani Narayanan
By Kathick Apr 03, 2025 10:30 AM GMT
Report

சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் காதல் சர்ச்சையில் சிக்கினார். சில திரைப்படங்களில் நடித்தார் ஆனால், அவை யாவும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா பிக் பாஸ் ஷிவானி.. பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி | Bigg Boss Shivani Talk About Plastic Surgery

இவருடைய கிளாமர் போட்டோஷூட் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். இந்த நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்த பலரும், ஷிவானி தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா? முகமே மாறிவிட்டதே! என தொடர்ந்து கேள்விகள் கேட்டு வந்தனர்.

இது பெரும் சர்ச்சையான நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஷிவானி வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா பிக் பாஸ் ஷிவானி.. பெரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி | Bigg Boss Shivani Talk About Plastic Surgery

இதில் "நான் பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் பண்ணல. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் என்று நிறைய பேர் சொல்றாங்க. கடந்த சில நாட்களாக இந்த செய்தி நிறைய பரவிட்டு இருந்தது. உண்மைய சொல்லணும்னா அப்படி நான் செய்யவில்லை. அப்படி செய்வது ஈஸி இல்ல, அதற்கு பல லட்சங்கள் செலவாகும் என்று நான் நினைக்கிறேன். ஈசியாக எல்லாருமே அதை பண்ணிட முடியாது. கண்டிப்பாக நான் பண்ணல. நான் கடந்த ஒரு வருடமாக ஹெல்த்தி டயட் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன். அதனால கூட என்னுடைய முகம் அப்படி மாறி இருக்கலாம்" என கூறி அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.