அந்த நடிகருடன் நெருக்கமாக இருந்த அனன்யா பாண்டே.. அதுக்குனு இப்படி பேசக்கூடாது..
vijay devarakonda
ananya pandey
By Kathick
பாலிவுட்டில் பல படங்களில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளைகொண்டவர் இளம் நடிகை அனன்யா பாண்டே.இவர் தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் தயாராகி வரும் லைகர் படத்தில் நடித்து வருகிறார்.
அனன்யா பாண்டே மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில், அனன்யா பாண்டே அளித்த ஒரு பேட்டியில், " தான் நடிக்கும் படங்களில் தைரியம் மிக்கவராகவும், முரடன் போலவும் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா ".
மேலும், " ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப அமைதியானவர். சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜத்தில் காட்டுவதில்லை. அவர் ஒரு பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார் " என்று கூறியுள்ளார். நடிகை அனன்யாவின் இந்த கருத்துக்கு, விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.