காசு கொடுத்து அந்த மாதிரி பண்றாங்க.. விஜய் தேவரகொண்டா மீது பிரபல நடிகை நடிகை குற்றச்சாற்று
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது சமந்தாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
புஷ்பா’ படத்தில் சுனில் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் அனசுயா பரத்வாஜ். இவர் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நானும் விஜய் தேவரகொண்டா நல்ல நண்பர்களா தான் இருந்தோம். அர்ஜுன் ரெட்டி படத்தில் சில தவறான வார்த்தைகளை தியேட்டரில் mute செய்யப்பட்டது. ஆனால் அவர் தியேட்டருக்கு செல்லும் போது ரசிகர்களிடம் அந்த வார்த்தைகளைக் கூறினார்.
இந்த தவறான வார்த்தைகளை விஜய் தேவரகொண்டா ஊக்குவிப்பது போல் இருந்தது. இது குறித்து அவரிடம் நாம் பேசினேன். இதன் பின்னர் அவருடைய ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டேன்.
விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து சிலர் காசு கொடுத்து எனக்கு எதிரான கருத்துக்களை பதிவிட செய்கிறார்கள். இந்த விஷயம் விஜய் தேவரகொண்டாவுக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது என்று கூறியுள்ளார்.