ரம்யா பாண்டியனின் தங்கை கீர்த்தியும் அவரின் தந்தையும் இந்த படத்திலா! வைரலாகும் வீடியோ..

Trailer biggboss movie
By Jon Feb 27, 2021 01:57 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் அருண் பாண்டியன். 62 வயதான நிலையில் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தனது மகள் கீர்த்தி பாண்டியனை சினிமாவில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தினார். அருண் பாண்டியன் நடிகை ரம்யா பாண்டியனின் தந்தையா என்று பிக்பாஸ் சென்றபோது கேள்விகள் எழுந்தது.

அதேபோல் கீர்த்தி பாண்டியனும் ரம்யா பாண்டியனின் சகோதரி என்ற கேள்வியும் இருந்தது. ஆனால் கீர்த்தி பாண்டியன் அருண் பாண்டியனின் மகள். அவரின் சித்தப்பா முறைதான் வருகிறது என்று கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து அவரது உறவினர் மகள் ரம்யா பாண்டியன் என்பவரும் கவனிக்கப்படும் நாயகியாக உருவெடுத்துள்ளார். மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹெலன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அருண்பாண்டியன்.

அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வர முடியவில்லை. அவர் நடித்த படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் எப்படியாவது தன்னுடைய மகளை முன்னணி நாயகியாக உயர்த்திவிட வேண்டும் என இந்த முடிவை எடுத்துள்ளார் அருண்பாண்டியன்.

மலையாளத்தில் வெளியான ஹெலன் திரைப்படம் தந்தை மற்றும் மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம். தற்போது அதே படத்தை தமிழுக்கு ஏற்றவாறு சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து அன்பிற்கினியாள் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். அன்பிற்கினியாள் படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அருண்பாண்டியன் நடிப்பு இந்த ட்ரெய்லரில் வேறு அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.