மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சி பக்கம் வந்த தொகுப்பாளினி டிடி... எந்த ஷோ பாருங்க
Dhivyadharshini
By Yathrika
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.
தமிழில் டாப் தொகுப்பாளினி யார் என்று ரசிகர்களிடம் கேட்டால் உடனே ரசிகர்கள் தொகுப்பாளினி டிடி என்ற தான் கூறுவார்கள், அந்த அளவிற்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் தொகுப்பாளினியாக டிடி உள்ளார்.
அவர் கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சி பக்கம் வருவதில்லை என ரசிகர்கள் வருத்தம் அடைந்தார்கள். ஆனால் பட நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என தொகுத்து வழங்கி வருகிறார்.
அவர் மீண்டும் தொலைக்காட்சி பக்கம் வர மாட்டாரா என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்க தற்போது விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் டிடி.
அதாவது குக் வித் கோமாளி பைனல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.