இரவு பார்ட்டி, சுச்சி லீக்ஸ் புகைப்படம்! பிரபல இசையமைப்பாளரை காதலித்து ஏமாந்த ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் அனிருத். இசைமைப்பாளர், பாடகர் என்று தற்போது தமிழ் படங்களை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் அனிருத்.
இதேபோல் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இரவு பார்ட்டி நடிகர்களுடன் நெருக்கமாக நடித்து பல சர்ச்சையிலும் சிக்கினார்.
அப்போது அனிருத்துடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் பார்ட்டி புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. அப்புகைப்படத்தால் தென்னிந்திய சினிமாவே பரபரப்பானது. ரகசியமாக வைத்திருந்த காதல் தொடர்பு இந்த புகைப்படத்தால் அனிருத்தையும் ஆண்ட்ரியாவையும் பலர் கேள்வி கேட்டு வந்தனர்.
அனிருத்திடம் காதல் பற்றியும் பிரேக்கப் பற்றியும் திருநங்கை ரோஸ் கேள்வியாக கேட்டார். அதற்கு அனிருத், என்னுடைய முன்னாள் காதலி பெயர் ஆண்ட்ரியா என்றும் எனக்கு 19 வயது அவருக்கு 25 வயதாக இருக்கும் போது காதலித்தோம். அந்த 25 வயது தான் பிரேக்கப்பிற்கு காரணமாக இருந்தது.
அது உண்மையான காதல் என்று சொல்ல முடியாது என்று அனிருத் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஆண்ட்ரியா காதல் தோல்வி குறித்து கூறியிருக்கிறார். அதில், நான் ஒருவரை நம்பி காதலித்தேன். அவர் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்திருந்தார்.