கேன்சர் பாதிக்கப்பட்ட நடிகையிடம் வீடியோ கால் பேசக்கேட்ட நபர்!! கதறி அழும் அங்காடிதெரு சிந்து...
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் அங்காடி தெரு. இப்படத்தின் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் அங்காடி தெரு சிந்து. சமீபகாலமாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில தவறான சிகிச்சையால் மார்க்கத்தை அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதன்பின் உதவி கேட்டு பல பேட்டிகளில் தான் கஷ்டப்பட்டு வருவதை கூறி மனவிட்டு அழுது வந்தார். சமீபத்தில் பிரபல தனியார் இணையதளத்திற்கு அளித்த பேட்டி அளித்த சிந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார்.
இரவு 12.45 மணிக்கு ஒரு தம்பியிடம் ஒருந்து ஒரு கால் வந்தது. என்னிடம் ஒரு பொண்டாட்டியிடம் பேசுவது போல் வாடி போடி என்று பேச ஆரம்பித்தான். தம்பி 12.45 மணியாகுது நாளைக்கு காலைல பேசு என்று சொல்லியுள்ளார்.
அதற்கு அந்த நபர், இப்போ தான் பேசனும், நான் இப்போதான் ஃபிரியாக இருக்கிறேன் என்ன வேண்டும் எவ்வளவு வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சிந்து, ஒரு வாரம் 80 ஆயிரம் ஆகுது 5 லட்சம் தேவைப்படுது என்று கூறியதற்கு, 5 ஆயிரம் என்ன 10 லட்சம் தருகிறேன்.
வீடியோக்கால்ல வரமுடியுமா, ஒரு மார்பகம் தான் இல்லை இன்னொரு சைட் காட்டுறீயா நாளைக்கு அக்கவுண்ட்ல காசு போடுறேன்ன்னு சொன்னான். இதை சொல்லக்கூடாது என்று நினைத்தேன். சிலர் இப்படியான கேடுக்கட்டப்படி நடக்குறாங்க என்று கதறி அழுதுள்ளார் அங்காடி தெரு சிந்து.