இந்த வயசுல கர்ப்பமான ரோலா? அஜித் ரீல் மகள் அனிகாவை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மகள் ரோலில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை அனிகா. சுரேந்திரன். இப்படத்தினை அடுத்து நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பின் அஜித்துடன் விசுவாசம் படத்தில் மீண்டும் அவருக்கு மகளாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இதன்பின் 15 வயதிலேயே மக்களை ஈர்க்கும் படியான் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார்.
இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் அவரது போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்திழுத்தது. தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாகவும் நடித்து வரும் அனிகா தற்போது கர்ப்பமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
வாசுவின் கர்ப்பிணிகள் என்ற டைட்டிலில் உருவாகும் இப்படம் 16 முதல் 52 வயதிருக்கும் நான்கு பெண்கள் மற்றும் ஒரு டாக்டர் ஆகியோரை சுற்றி நடக்கும் சம்பவமாக கதை இருக்குமாம்.
இதில் அந்த 4 பெண்களில் ஒரு பெண்ணாக அனிகா நடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டரில் அனிகாவை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள். மேலும் பிக்பாஸ் நடிகை வனிதா விஜயகுமாரும் இப்படத்தில் நடித்துள்ளாராம்.
My hearty congratulations for the entire team of this movie. All the best ???@XBFilmCreators pic.twitter.com/yosDxaKPIF
— vijayantony (@vijayantony) June 5, 2022