17 வயசில் இளம் நடிகைக்கே டஃப் கொடுக்கும் லுக்! அஜித்தின் ரீல் மகள் அனிகா லேட்டஸ்ட்..

ajith anikha viswasam childartist kuttynayanthara
By Edward Apr 14, 2022 04:54 PM GMT
Report

சினிமாவில் தற்போது குட்டி நட்சத்திரங்கள் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட்டில் ஈடுபாட்டினை அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படியொரு நிலையில் இருப்பவர் தான் அனிகா சுரேந்திரன்.

மலையாள குழந்தை நட்சத்திரமாக ஒருசில படங்களில் நடித்து வந்த அனிகா நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் திரிஷா மகளாக நடித்திருப்பார். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்புக்கு அடுத்து பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரெளடிதான், மிருதன், தி கிரேட் பாதர், ஜானிஜானி எஸ்பாப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

மீண்டும் நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்தில் நயன் தாரா அஜித்திற்கு மகளாக நடித்தார். இப்படத்தில் நடித்த அனிகா மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அதிலிருந்து பெரியளவில் பேசப்பட்ட குழந்தை நட்சத்திரமாக வளம் வந்தார்.

தற்போது கதாநாயகியாக தெலுங்கு படத்தில் அறிமுகமாகவுள்ளார். மேலும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் குட்டி ஜெயலலிதாவாக நடித்து மிரட்டினார்.

இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அனிகா போட்டோஷூட் பக்கம் திரும்பினார். கடந்த சில ஆண்டுகளில் குட்டி நயன் தாரா என்று கூறும் அளவிற்கு அவரின் ஆடை அணிகலன்கள் ஒத்துப்போய் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

தற்போது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 17 வயதே ஆகும் அனிகாவை சில வர்ணித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.