17 வயது அஜித் ரீல் மகள் அனிகாவா இது? நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஷூட்

Anikha Surendran
By Edward Jun 07, 2022 10:05 AM GMT
Report

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் கொடிக்கட்டி பறந்தவர்களில் ஒருவர் அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமாகினார் அனிகா. அதன்பின் நானும் ரவுடி தான், மிருதன் போன்ற தமிழ் படங்களும் சில மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.

இதன்பின் அஜித் நயன் தாரா இணைந்து நடித்த விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்திருப்பார். படத்தில் அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்து வந்தார். பின் 15 வயதிலேயே இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமான போட்டோஷூட் புகைப்படங்களுக்கு தாவினார்.

ரசிகர்களை ஈர்க்க போட்டோஷூட் மூலம் சில வாய்ப்புகளையும் பெற்றார். தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாகவும் நடித்து வரும் அனிகா வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் கர்ப்பமான சிறுமி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

அதன் பர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது. தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் படியான போட்டோஷூட்டினை வெளியிட்டுள்ளார் அனிகா. இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு 17 வயசு தானா என்று ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.