16 வயதில் இப்படியொரு மாற்றம்! அஜித்தின் ரீல்மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள்..
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். கத துடருன்னு படத்தில் நடிக்க ஆரம்பித்த அனிகா நானும் ரெளடிதான், மிருதன் பொன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து மீண்டும் நடிகர் அஜித்தின் விசுவாசம் படத்தில் அவரின் மகளாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தன் நடிப்பால் மக்கள் மனதை ஈர்த்த அனிகா போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். தற்போது 16 வயதான அனிகா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதன்மூலம் சில படங்களில் கதாநாயகியாகவும் அறிமுகமாகவுள்ளார் அனிகா.
தற்போது பல நாட்கள் கழித்து மீண்டும் டிரெண்ட்டான அனிகா சேலை அணிந்து க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.