18 வயதில் நடிகையானதும் இப்படியா!! அச்சு அசல் நயன்தாராவாக மாறிய அஜித்தின் ரீல் மகள் அனிகா
என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்குமார், திரிஷாவின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் குட்டிப்பெண் அனிகா சுரேந்திரன்.

மலையாள குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா 2019ல் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து நல்ல நடிப்பை வெளிக்காட்டினார் அனிகா.
இதன்மூலம் தென்னிந்திய சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்ற அனிகா தன்னுடைய 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா சமீபத்தில் இரட்சன் என்ற படத்தில் போதை பொருள் பயண்படுத்தும் மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் படுகிளாமராக நடித்தார்.

மேலும் இணையத்தில் குட்டி நயன் தாரா என்று கூறும் அளவிற்கு தன் தோற்றத்தை மாற்றி கிளாமரில் கலக்கி வந்தார். பார்க்க அச்சு அசல் நயன் தாராவை உரித்து வைத்திருக்கும் அனிகா தற்போது கதாநாயகியாக 18 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அச்சு அசல் நயன் தாராவை உறித்து வைத்திருக்கும் படியான போட்டோஷூட்டினையும் வெளியிட்டு வருகிறார். சமீஇபத்தில் அவர் வெளியிட்ட க்யூட் புகைப்படத்தை பார்த்து அப்படியே நயன் தாராவை போல் இருக்கிறார்களே என்று கருத்துக்களை கூறி ஷாக்காகி வருகிறார்கள்.



