அஜித் குடும்பத்தில் ஒரு அணிலா? கலாய்த்தவரை வெச்சு வெளுத்து வாங்கிய AK சகோதரர்..

Ajith Kumar Vijay Gossip Today Tamil Actors
By Jai Apr 29, 2026 09:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸிங்கில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியப்பின் விஜய் ரசிகர்கள் சிலர் அமைதியாகினாலும் ஒருசில வேண்டுமென்றே அஜித் ரசிகர்களை சீண்டு வருகிறார்கள்.

அஜித் குடும்பத்தில் ஒரு அணிலா? கலாய்த்தவரை வெச்சு வெளுத்து வாங்கிய AK சகோதரர்.. | Anil Kumar Slams Netizen Anil Troll Ajith Family

அதேபோல், அஜித் ரசிகர்களும் அமைதியாக இல்லாமல் விஜய் ரசிகர்களை வம்பிழுத்தும் வருகிறார்கள். சில கட்சியினர் இணையத்தில் அஜித் - விஜய் குறித்து ஏதாவது விமர்சித்தாலும் அவை பேசுபொருளாக மாறிவிடுகிறது.

அஜித் குடும்பத்தில் ஒரு அணிலா

இதுஒரு பக்கம் இருக்க, அஜித்தின் சகோதரர் அனில் குமார் குறித்து நெட்டிசன்கள் ஒருவர், அஜித் வீட்டில் ஒரு அணிலா என்று விமர்சித்துள்ளனர். அதற்கு அஜித்தின் சகோதரர் அனீல் குமார் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே அஜித் குறித்து கேள்வி கேட்டால், அதை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள், என்னை கேட்காதீர்கள், என்னிடத்தில் என்னைப்பற்றி மட்டும் கேளுங்கள் என்று கூறியிருந்தார்.

அஜித் குடும்பத்தில் ஒரு அணிலா? கலாய்த்தவரை வெச்சு வெளுத்து வாங்கிய AK சகோதரர்.. | Anil Kumar Slams Netizen Anil Troll Ajith Family

இதை பார்த்த ஒரு ரசிகர், அஜித் குடும்பத்தில் ஒரு அணிலா என்று கேட்க அதற்கு அவர், நான் அணில் குமார் இல்லை, அனில் குமார். கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிய வேண்டாம், நீங்கள் சண்டை செய்ய விரும்பிவிட்டால் துப்பாக்கிச் சண்டைக்கு கத்தியை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டாம். ஆனால் அப்படி கத்தியுடன் தான் செல்வீர்கள் என்றால் கடுமையாக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.