விரைவில் அனிருத் - காவ்யா மாறனுக்கு திருமணம்!! ஜோடியா ஜெயிலர் 2-க்கு போயிருக்காங்க..

Anirudh Ravichander Marriage Greece Kavya Maran Jailer 2
By Jai Oct 16, 2026 02:15 PM GMT
Report

அனிருத் - காவ்யா

இந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் அனிருத் ரவிச்சந்தர். சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை இருக்கும் நடிகர்கள் படங்களில் இசையமைத்து வருகிறார்.

விரைவில் அனிருத் - காவ்யா மாறனுக்கு திருமணம்!! ஜோடியா ஜெயிலர் 2-க்கு போயிருக்காங்க.. | Anirudh And Kavya Maran Watch Jailer 2 Together

இது ஒருபக்கம் இருக்கையில், அனிருத், தொழிலதிபரும், தயாரிப்பாளருமான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனும் தீவிரமாக காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து, இரு வீட்டாருக்கு நெருக்கமானவர்கள் பேட்டிகளில் உறுதிப்படுத்தி கூறியிருந்தனர்.

மேலும் இரண்டு பேரும் இந்தியாவில் திருமணம் நடத்துவதற்கு பிளான் செய்யவில்லையாம், மாறாக க்ரீஸ் நாட்டில் நவம்பர் 11 ஆம் தேதி திருமணத்தையும் நவம்பர் 14 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் பிரமாண்டமாக நடக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

விரைவில் அனிருத் - காவ்யா மாறனுக்கு திருமணம்!! ஜோடியா ஜெயிலர் 2-க்கு போயிருக்காங்க.. | Anirudh And Kavya Maran Watch Jailer 2 Together

ஜெயிலர் 2 FDFS

இந்நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி ஜெயிலர் 2 படம் வெளியாகியுள்ளது. அதனை பார்ப்பதற்காக காவ்யா மாறனும், அனிருத்தும் ஜோடியாக தியேட்டருக்கு சென்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்துள்ளனர். முன் வரிசையில் அனிருத்தும், அதன்பின் வரிசையில் காவ்யாவும் உட்கார்ந்து பார்த்துள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.