விக்ரம் படத்தில் அந்தமாதிரி BGM போட்டு அதிரவைத்த அனிரூத்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அடுத்தடுத்த வெற்றி படங்களுக்கு இசையை கொடுத்து பிரபலமானவர் அனிருத் ரவிச்சந்திரன். விஜய், அஜித், ரஜினி, கமல், தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக வெளியான முன்னணி நட்சத்திரங்களின் படங்களான, மாஸ்டர், டாக்டர், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார் அனிருத்.
சில தினங்களுக்கு முன் வெளியான கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் இதுவரை யாருக்கும் போடாத மாஸான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் அனிருத்.
அந்தவகையில் விக்ரம் படத்தில் விபச்சாரப்பெண் அந்தமாதிரி கத்துவது போன்ற காட்சியில் அனிருத் வேறவெவல் பிஜிஎம் ஒர்க் செய்திருப்பார். இந்த காட்சிக்கு தியேட்டரில் இருந்தவர்கள் எல்லோரும் கத்தி ஆர்ப்பரித்தனர்.
இதை வைத்து நெட்டிசன்கள் பலர் அந்த பின்னணி இசையை வைரலாக்கியும் மீம் புகைப்படத்தையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.