பவர் ஹவுஸ் பாட்டு..ஏ ஆர் ரஹ்மானிடமே காப்பி அடித்த அனுருத்!! ரவுண்ட் கட்டிய நெட்டிசன்ஸ்..
கூலி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி.
நாகர்ஜுனா, அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, செளபின் சாகிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கூலி படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
படத்தில் அனிருத்தின் இசையில் ஏற்கனவே இரு பாடல்கள் வெளியான நிலையில், சில நாட்களுக்கு முன் மூன்றாவது பாடலான பவர் ஹவுஸ் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பவர் ஹவுஸ்
இந்நிலையில் இப்பாடலில் வரும் மெட்டு ஏ ஆர் ரஹ்மான் இசையில் இருந்து அனிருத் காப்பி அடித்துள்ளார் என்று நெட்டிசன்கள் ஒரு வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான காதலர் தினம் படத்தில் ஹோ மரியா பாடலில் வரும் மெட்டு போல இருக்கிறது. இதனை வைத்து நெட்டிசன்கள் அனிருத்தை கலாய்த்து வருகிறார்கள்.
வெளிநாட்டுல சுட்டா கேஸ் போடுறாங்கனு உள்ளூர் பாய் எதுவும் கேட்க மாட்டார்னு இங்கையே சுட்டுட்டான்
— Haraappan (@haraappan) July 23, 2025
நல்ல Sound Engineer இருக்கனால தப்பிச்சிட்டு வரான் pic.twitter.com/X2kkQ5lWhM
அடேய் அனிருத் இதுவும் காபியா 🤦♂️🤦♂️ pic.twitter.com/6Of4oxq4oB
— மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) July 24, 2025