துபாயில் சாப்பட்டுக்கே கஷ்டம்!! என் மனைவி எடுத்த முடிவுதான்!! மாகாபா ஆனந்த் ஓபன்..

Ma Ka Pa Anand Star Vijay
By Edward Nov 06, 2025 08:30 AM GMT
Report

மா கா பா ஆனந்த்

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருபவர் தான் மா கா பா ஆனந்த். பிரியங்கா - மாகாபா காமினேஷனில் காமெடியாக நிகழ்ச்சியை எடுத்து செல்வதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், மனைவி பற்றி சில விஷங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், துபாயில் ரேடியோ ஜாக்கியாக வேலை செய்து கொண்டிருந்தேன். என்னோட ஷிப்ட் நைட் 9 - 11 ஒரு ஷோ, 3 - 6 ஒரு ஷோ பண்ணுவேன். பகல்ல தூங்குவேன், நைட்ல வேலை.

துபாயில் சாப்பட்டுக்கே கஷ்டம்!! என் மனைவி எடுத்த முடிவுதான்!! மாகாபா ஆனந்த் ஓபன்.. | My Wife Susan Is The Reason For All This Ma Ka Pa

என்னோட மனைவி விசிட் விசாவில் துபாய் வந்து என்னோட நிலைமையை பார்த்துவிட்டு இந்த மாதிரி ஒரு வாழ்க்கையே உனக்கு வேண்டாம். ஊர்ல இருக்கவங்க துபாயில் இருக்காரு, சொகுசான வாழ்க்கைன்னு நினைப்பாங்க.

ஆனா நீ இங்க சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறது தெரியாதுனு சொல்லி வேலைய விட்டுடு என்று கூறி என்னை கூட்டிட்டு வந்துட்டா. அதுதான் என்னோட வாழ்க்கைல முதல் டர்ன்னிங் பாய்ண்ட். அதுக்கு அப்புறம் தான் என் வாழ்க்கையே மாற தொடங்கிடுச்சி.

இப்போ இந்த நிலைல இருக்க காரணம் என்னோட மனைவி சூசன் தான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் மா கா பா ஆனந்த்.