அனிருத் முடிவுதான் அனைத்தும்...ஆனால் எனக்கு சம்பந்தமில்லை!! ரவி ராகவேந்திரா ஓபன் டாக்...

Anirudh Ravichander Wedding Kavya Maran
By Jai Nov 17, 2026 06:45 AM GMT
Report

அனிருத் - காவ்யா

இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 11 ஆம் தேதி திருமணமானதை அடுத்து, அனிருத் எடுக்கும் முடிவுகள் குறித்து அவரது தந்தை ரவி ராகவேந்திரா பேட்டியொன்றில் பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அனிருத் முடிவுதான் அனைத்தும்...ஆனால் எனக்கு சம்பந்தமில்லை!! ரவி ராகவேந்திரா ஓபன் டாக்... | Anirudh Father Ravi Raghavendra Anirudh Callsheet

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை காதலித்து வருவதாக செய்திகள் பல ஆண்டுகளாக பரவியது. இதனை அவர்களின் நெருக்கமான உறவினர்கள் மறைமுகமாக அதை கன்ஃபார்ம் செய்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன், மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் இதனை உறுதி செய்தார். இதனையடுத்து, அனிருத் - காவ்யா திருமணம் கிரீஸ் நாட்டில் பிரமாண்டமான முறையில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. முக ஸ்டாலின், ரஜினிகாந்த் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

அனிருத் முடிவுதான் அனைத்தும்...ஆனால் எனக்கு சம்பந்தமில்லை!! ரவி ராகவேந்திரா ஓபன் டாக்... | Anirudh Father Ravi Raghavendra Anirudh Callsheet

இந்நிலையில், அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவி ராகவேந்திரா

அதில், அனிருத் இசையமைத்த முதல் படமான 3 படத்தின்போது அவருக்கு வெறும் 19 வயதுதான். அப்போதில் இருந்தே எந்த படத்தில் இசையமைக்க வேண்டும், எந்த பிராஜெக்ட் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது வரை அனைத்தும் அவர் முடிவுகள் தான். எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

மற்ற விஷயங்களை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்பதுதான் உண்மை. ஆனால் எந்த பிராஜெக்ட் செய்ய வேண்டும், எந்த நிறுவனத்துடன் பணியாற்ற வேண்டும், எந்த இயக்குநருடன் இனைந்து பணியாற்ற வேண்டும் என்பது எல்லாம் அவன் தான் முடிவெடுப்பான்.

அனிருத் முடிவுதான் அனைத்தும்...ஆனால் எனக்கு சம்பந்தமில்லை!! ரவி ராகவேந்திரா ஓபன் டாக்... | Anirudh Father Ravi Raghavendra Anirudh Callsheet

சினிமாவில் எனக்கு தொடர்பு இருந்தாலும், இதுவரை அவனிடம் நான் எதுவும் சொன்னது இல்லை, ஒரு கதையை கேட்டுவிட்டு, அப்படத்தில் பணியாற்றலாமா? எந்த நிறுவனத்துடன் இணையலாம், யாருடன் அசோசியேட்டாகலாம் என்று அனைத்தும் அவன் முடிவு, நான் கதை கேட்டு முடிவெடுப்பதோ, வேறு யாராவது சொல்வதை கேட்டு அவன் முடிவெடுப்பது கிடையாது.

அனைத்தும் அனிருத்தே சுயமாக எடுக்கிறான் என்று கூறியிருக்கிறார். அனிருத் தந்தை இப்படி கூறியதையடுத்து, தனிப்பட்ட திருமண வாழ்க்கையை பெற்றோர்கள் தான் முடிவெடுத்தார்களோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.