ரஜினி மகளுடன் பூஜையில் இசையமைப்பாளர் அனிருத் எடுத்துக்கொண்ட புகைப்படம்!!
Rajinikanth
Anirudh Ravichander
Soundarya Rajinikanth
Latha Rajinikanth
By Edward
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் கடந்த 23 ஆம் தேதி ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
ரஜினியின் நெருங்கிய உறவினர் இசையமைப்பாளர் அனிருத் தன் பெற்றோருடனும் பூஜையில் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மகன் மகள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
பெரும்பாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் தான் அனிருத் பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளார். தற்போது ரஜினியின் இரண்டாம் மகள் செளந்தர்யா ரஜினிகாந்துடன் பூஜையின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

