முன்பு இருந்த சந்தோஷம் இப்போது இல்லை.. அனிருத்துக்கு இப்படியொரு நிலைமையா
இந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் ரவிச்சந்தர். இவர் இசையில் அடுத்ததாக ஜனநாயகன் படம் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து ஜெயிலர் 2, ரஜினி 173, Lik, அரசன், கிங், AA23 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

"சிறிய வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும்போது ரூ. 500 சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். அப்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் மனதில் ஏற்படும். சில நிகழ்வுகளில், சம்பளம் தராமல் வெறும் வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள்.
இப்போது கோடிகளில் சம்பளம் மாறிவிட்டது. பம்பரமாக இசைப்பணியில் மூழ்கி கிடந்தாலும், முன்பு இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. என்னதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும், அந்த சிறு வயது சந்தோஷத்தை மட்டும் மறக்கவே முடியாது" என கூறியுள்ளார்.