அனிருத் - காவ்யா கிரீஸ் திருமணம்!! முதல் வாழ்த்தை போட்ட நடிகை ருக்மிணி..
அனிருத் ரவிச்சந்தர் - கவ்யா மாறன் திருமணம் இன்று நவம்பர் 11 ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெறும் நிலையில் முதன்முதலில் அனிருத்துகு வாழ்ந்து தெரிவித்துள்ளார் பிரபல நடிகை ருக்மணி.
அனிருத் - காவ்யா
நீண்டகாலமாக அனிருத் - காவ்யா காதலித்து வந்த நிலையில் இருவரின் திருமணத்திற்கு குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்தனர். திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நவம்பர் 21 ஆம் தேதி நடக்கவுள்ளதாகயும் கிரீஸ் நாட்டில் இருவரின் திருமணமும் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன் முக்கிய பிரபலங்களான ரஜினிகாந்த், மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினி, மணமகன் அனிருத் உட்பட பலரும் கிரீஸ் நாட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில் இன்று நவம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக தெரிவித்த நிலையில், திருமண புகைப்படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
ருக்மிணி வாழ்த்து
இதற்கிடையில் அனிருத் - காவ்யா திருமணத்திற்கு வாழ்த்து கூறி முதன்முதலில் நடிகை ருக்மிணி வசந்த் எக்ஸ் தள பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அனிருத், காவ்யா மாறன் கழுத்தில் தாலி கட்டிவிட்டார் என்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Happy Married Life @anirudhofficial 💐 https://t.co/UFzPlCH4Qa
— Rukmini Vasanth (@rukminivasanth_) November 11, 2026