ஒரே நேரத்தில் அந்த விஷயத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ், அனிருத்.. ஒரு வேல அதுவா இருக்குமோ

Keerthy Suresh Anirudh Ravichander
By Kathick Jun 03, 2022 05:56 AM GMT
Report

சமீபகாலமாக இசையமைப்பாளர் அனிருத்திற்கும், நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் திருமணம் என்பது போல் பல தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்து இருவரும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், நேற்று நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் சாணி காயிதம் மற்றும் சர்க்காரு வாரி பாட்டா ஆகிய படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கீர்த்தி சுரேஷ் அறிக்கை வெளியிட அடுத்த ஒரு மணி நேரத்தில் அனிருத்தும் பீஸ்ட், டான், காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் ஆகிய படங்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், ஒரே நேரத்தில் எப்படி இருவரும் அறிக்கை வெளியிடமுடியும். ஒரு வேல அதுவா இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.