இரவு பார்ட்டியில் ஓவர் சரக்கு!! நடிகை கீர்த்தி சுரேஷின் குடிப்பழக்கத்திற்கு இவர்தான் காரணம்...
மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாகவும் இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை மேகனாவின் மகளாக அறிமுகமாகி தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் கீர்த்தி.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். மகாநடி படத்தில் சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்து தேசிய விருதினையும் தட்டிச்சென்றார்.
இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்து சற்று மார்க்கெட்டையும் இழந்தார். அடக்கவுடக்கமாக இருந்த கீர்த்தி சுரேஷ் ஒல்லியானதோடு கவர்ச்சி பக்கமும் சென்று அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷ் குடிப்பழக்கத்தினை கற்றுக்கொடுத்ததே இசையமைப்பாளர் அனிருத் தான் என்று கூறப்படுகிறது. அனிருத் பெரும்பாலும் தான் பணியாற்றும் படங்களில் இருக்கும் பிரபலங்களுக்கு இரவு பார்ட்டி வைப்பதுண்டு.
அப்படி நடிகைகள், பாடகிகளுக்கும் பார்ட்டி கொடுத்து அவர்களுடன் நெருக்கமாக பழகுவாராம். அப்படி அவர் இரவு பார்ட்டி முடிந்து எடுத்துக்கொண்ட கீர்த்தி சுரேஷ் மற்றும் மாளவிகா மோகனுடன் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை கொடுத்தது.